தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், இன்று (20) மீண்டும் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரின் பிணை மனு மீதான தீர்ப்பை மாத்தறை நீதவான் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2023 ஆம் ஆண்டு வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோன், 20 நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர் நேற்று (19) மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இவ்வாறு சரணடைந்த சந்தேக நபரான தேசபந்து தென்னகோனை இன்று வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
குறித்த உத்தரவிற்கு அமைய தேசபந்து தென்னகோன் நேற்று மாலை (19) அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
