Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பிஸ்கட் வாங்கச் சென்ற 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 65 வயது வர்த்தகர் மாதம்பேயில் கைது

June 13, 2026

உத்தேச கல்விச் சீர்திருத்தக் கொள்கைக் கட்டமைப்பு உருவாக்கப் பணிகளை ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்யுமாறு தேசிய கல்வி ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

June 13, 2026

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கான குழு

June 13, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » வியட்நாம் தேசிய சட்டமன்றத்தின் துணைத் தலைவர் தலைமையிலான பாராளுமன்ற தூதுக் குழுவினர் இலங்கை வருகை
இலங்கை

வியட்நாம் தேசிய சட்டமன்றத்தின் துணைத் தலைவர் தலைமையிலான பாராளுமன்ற தூதுக் குழுவினர் இலங்கை வருகை

ThanaBy ThanaMarch 20, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இலங்கையின் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் அழைப்பையேற்று வியட்நாம் தேசிய சட்டமன்றத்தின் துணைத் தலைவர் நுகுயென் டக் ஹை (Nguyen Duc Hai) தலைமையிலான வியட்நாம் பாராளுமன்றத் தூதுக்குழுவினர் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
.

இந்தத் தூதுக்குழுவினர் இன்றைய தினம் (20) இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதுடன், சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய, பிரதிச் சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி மற்றும் அமைச்சர்கள் சிலரைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

இந்தக் குழுவினரின் பாராளுமன்ற விஜயத்தின் போது இலங்கை-வியட்நாம் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் உறப்பினரகளைச் சந்திப்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டு 55 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் மரமொன்றை நாட்டவுள்ளனர். இந்தக் குழுவினர் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர், கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ஆகியோரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

இந்தக் கலந்துரையாடல்கள் வியட்நாம் மற்றும் இலங்கை இடையேயான நீண்டகால நட்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் இருதரப்பு உறவுகளை புதிய பரிமாணத்துக்குக் கொண்டு செல்ல உறுதுணையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இவர்கள் சபாநாயகரின் கலரியிலிருந்து சபை அமர்வுகளைப் பார்வையிடவிருப்பதுடன், பாராளுமன்றக் கட்டடத்தொகுதியைச் சுற்றிப் பார்வையிடுவதற்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், வியட்நாம் தூதுக் குழுவினரின் இலங்கை விஜயத்தின் போது முன்னாள் வியட்நாம் ஜனாதிபதி ஹோ சி மின் (Ho Chi Minh) அவர்களுக்கு கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள சிலைக்கும் அஞ்சலி செலுத்தவிருப்பதுடன், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரைச் சந்தித்தல் உள்ளிட்ட மேலும் பல நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளனர்.

அத்துடன், இந்தக் குழுவினர் இலங்கையிலிருந்து புறப்பட முன்னர் தலதா மாளிகையைத் தரிசனம் செய்யவிருப்பதுடன், சர்வதேச பௌத்த அருங்காட்சியகத்தையும் பார்வையிடவுள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பிஸ்கட் வாங்கச் சென்ற 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 65 வயது வர்த்தகர் மாதம்பேயில் கைது

    June 13, 2026

    உத்தேச கல்விச் சீர்திருத்தக் கொள்கைக் கட்டமைப்பு உருவாக்கப் பணிகளை ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்யுமாறு தேசிய கல்வி ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

    June 13, 2026

    ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கான குழு

    June 13, 2026

    ஜனாதிபதிக்கும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் (CHEC) தலைவருக்கும் இடையில் சந்திப்பு

    June 13, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.