பலூன் துண்டு ஒன்று தொண்டையில் சிக்கியதால் 11 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பம் நேற்று (20) காலி – நெலுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் குறித்த சிறுவன் பலூனை வைத்து விளையாடிக்கொண்டிருந்த நிலையில் பலூன் வெடித்து அதில் ஒரு துண்டு சிறுவனின் தொண்டையில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து குறித்த சிறுவன் நெலுவ – மெதகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
