கொழும்பு மாநகர சபைக்கான முதல்வர் வேட்பாளராக ஐக்கிய மக்கள் சக்தி, வைத்தியர் ருவைஸ் ஹனிபாவை களமிறக்கவுள்ளது.
கொழும்பை மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் வைத்தியர் ருவைஸ் ஹனிபாவை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தியடைந்த நகரமொன்றை உருவாக்குவதே கொழும்பு மாநகர சபையின் அதிகார எல்லையில் வசிக்கும் அனைவரினதும் எதிர்பார்ப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் நிமித்தமே முதல்வர் வேட்பாளராக அவரை முன்னிறுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
