நோர்வூட் வெஞ்சர் பகுதியில் நேற்று மாலை இடி மின்னலினால் ஒரு குடியிருப்பில் உள்ள கூரை பலத்த சேதம் அடைந்துள்ளது.
குறித்த சம்பவம் நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள வெஞ்சர் பகுதியில் நேற்று (22) இடம் பெற்றுள்ளது .
சம்பவம் இடம் பெற்ற வேளையில் வீட்டில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த ஆறு பேர் வீட்டில் இருந்துள்ளனர்.
எனினும் தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் வீட்டின் கூரை சேதமாகியுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
