அதீத போதைபொருள் பாவனை காரணமாக இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளை அதிக அளவில் உட்கொண்ட நிலையிலே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற அதேவேளை, உயிரிழந்த இளைஞனுடன் இணைந்து போதைப்பொருளை உட்கொண்ட மற்றவர்கள் தொடர்பாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
