மாத்தளை ,வாரியபொல பகுதியில் மக்கள் குடியிருப்பு பகுதியில் 20 அடி மலைபாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
கோழி மற்றும் ஆடு,மாடு வளர்க்கப்படும் கொட்டகை பகுதியில் வைத்தே இவ்வாறு குறித்த மலைபாம்பை இரு சகோதரர்கள் அடையாளங் கண்டுள்ளனர்.
இது தொடர்பில் பிரதேச வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த மலைபாம்பை காட்டுக்குள் விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
