இந்தியாவுடனான பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஒத்துழைப்பு ஒப்பந்தம் எனப்படும் எட்கா ஒப்பந்தம் நிறைவு செய்யப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய செவ்வியொன்றின் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் இனி ஆடைத் தொழிற்துறையை மாத்திரமே இலங்கை நம்பியிருக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
