நானுஓயா நிருபர்
நுவரெலியாவில் இன்றும் கவனயீர்ப்பு போராட்டம்
அரசாங்கத்தின் புதிய வரி கொள்கை உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டங்களை நாடளாவிய ரீதியில் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
இப்போராட்டத்திற்கு ஆதரவாக நுவரெலியா ஸ்ரீலங்கா டெலிகாம் நிறுவனத்தின் ஊழியர்களும் , நுவரெலியா அஞ்சல் அலுவலக ஊழியர்களும் இணைந்து கருப்பு கொடிகளை ஏந்தி
பிரதான அஞ்சல் அலுவலகத்திற்கு முன்பாக அடையாள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று மேற்கொண்டனர்.
அரசாங்கத்தின் தற்போதைய வரிக்கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இனிவரும் காலங்களில்
இலங்கை அரசு இவ்வாறான அராஜகமான முடிவுகள் எடுக்கக்கூடாது என வலியுறுத்தியும் குறித்த ஊழியர்களால் இந்த ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டது
குறித்த போராட்டத்தில் போது பிரதான அஞ்சல் அலுவலகத்தினை மூடி ஊழியர்களும் ஸ்ரீலங்கா டெலிகாம்
நிறுவனத்தில் பணிபுரியும் உட்கள மற்றும் வெளிக்கள ஊழியர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது .