நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய மக்கள் சக்தியின் இறக்குவானை தேர்தல் தொகுதியில் கொடக்கவெல பிரதேச சபைக்கு போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியினை உறுதி செய்யும் முகமாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்க பிரதீப் (24 ) இறக்குவான ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இடம் பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை
தொடர்ந்து இறக்வானை தொகுதியில் இடம் பெற்ற பொது கூட்டங்களிலே கலந்து கொண்டார்,
இதேவேளை ,பரியோவான் தேசிய கல்லூரி , தெம்மோவத்த, ரத்னாலோக்க,
புனித அந்தோனியார் கல்லூரிகளுக்கு விஜயத்தினை மேற்கொண்டு அதிபர், ஆசிரியர்களுடன் பாடசாலை அபிவிருத்தி
சம்பந்தமாக கலந்துரையாடினார்.
மேலும், இரத்தினபுரி மாவட்டத்தில் அரசாங்க பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பாகவும்
தற்போது அநேக பெருந்தோட்ட பாடசாலைகள் அமைந்துள்ள, பாடசாலைகளுக்கு சொந்தமான காணிகளுக்குரிய காணி உரிமையினை பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் கலந்துரையப்பட்டது.
மேலும் அமைச்சர் மலையக மக்களுக்கான வீட்டு திட்டத்தின் போது இயற்கை அனர்த்தங்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதோடு ஏனையவர்களுக்கு அவர்களின் பொருளாதார சூழ்நிலையினை கருத்திற் கொண்டு உள்வாங்கப்படும் எனவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் இம்முறை உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகமான படித்த இளைஞர் யுவதிகளுக்கு வாய்ப்பினை வழங்கியுள்ளதோடு ,
உங்கள் பிரதேசங்களில் அபிவிருத்தியின் போது ஊழலற்ற, பக்க சார்பற்ற அபிவிருத்தியினை மேற்கொள்ள அதற்கு நீங்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும், அரசாங்கத்தினால் பிரதேச சபைக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியினை
எமது பிரதேச சபை உறுப்பினர்களின் ஊடாக சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்ல முடியும் என பிரதி அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
