இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வாக அரசியல் அதிகார பகிர்வு கொண்டுவரப்படும்போது மலையகத் தமிழ் மக்கள் ஒரு தரப்பாக ஏற்றுக் கொள்ளப்படுவதை ஐக்கிய அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும் என அமெரிக்க தூதுவர் ஜூலி ச்சங் வலியுறுத்தியதாக மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் – மலையக அரசியல் அரங்கத்தின் தலைவரும் முன்னாள பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகம் திலகராஜ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று (09/02) நுவரெலியா கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்றது.
மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் அதன் பிரதிநிதிகளை சந்தித்து வரும் அமெரிக்கத்தூதுவர் இன்றைய தினம் அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜாவையும் இன்று சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பின் போதும் மலையக மக்களது பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் அதற்கான தீர்வு திட்டம் தொடர்பிலும் அதற்கு அமெரிக்கா உதவி வழங்கும் வழிமுறைகள் குறித்தும் அமெரிக்கத்தூதுவரின் கவனத்தை ஈர்த்ததாக தலைமை ஒருங்கிணைப்பாளர் ம.திலகராஜா தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது Upcountry Tamils : Charting a new future in Sri Lanka எனும் நூலை மலையக மக்களின் சார்பாக அன்பளிப்பாக வழங்கியுள்ளார். அமெரிக்க பல்கலைக்கலைகழக பேராசிரியரான டேனியல் பாஸ், இலங்கை சட்டத்தரணியும் ஆய்வாளருமான ஸ்கந்த குமார் ஆகியோர் இணைந்து தொகுத்துள்ள இந்த நூல் மலையகத்தின் பல்வேறு பிரச்சினைகளை வெளிப்படுத்துகின்ற ஆங்கில நூலாகும. 2019 ஆம் ஆண்டு இந்நூல் வெளியாகியுள்ளது.
இச்சந்திப்பின் ஊடாக, குறிப்பாக அதிகாரப்பகிர்வு தொடர்பாக 13 ஆவது அரசியல் திருதத்தம் தொடர்பாக அதனூடாக இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு தொடர்பாக முனைப்பாக பேசப்பட்டு வருகின்ற இந்த நாட்களிலே அமெரிக்கா இலங்கையுடன் நட்புறவு கொண்ட நாடு என்ற வகையிலும் வல்லரசு நாடு என்ற வகையிலும் இலங்கையின் அரசியல் நகர்வுகளில் அமெரிக்காவின் செல்வாக்கு இருக்கின்றது என்ற வகையிலும் இலங்கையில் தீர்க்கப்படாதிருக்கும் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்தும் அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டும் என்பதை தூதுவரின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன், இந்த மக்களின் மிக முக்கிய பிரச்சினையாக இருக்கக் கூடிய அரசியல் அதிகாரப் பகிர்வு, நிர்வா அதிகாரப் பகிர்வு இந்த இரண்டு விடயங்களிலும் கூடிய கவனத்தை செலுத்த வேண்ய தேவை உள்ளது என இச்சந்திப்பின்போது கலந்துரையாடியதாக தெரிவித்தார். கூடவே காணி, கல்வி, சுகாதார அபிவிருத்தி முதலான விடயங்களில் காட்டப்படும் பாரபட்சம் கட்டாய கருத்தடை முதலானவை குறித்தும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
நிர்வாக அதிகார பகிர்வாக பிரதேச செயலக அதிகரிப்பு வர்த்தமானி மூலமாக பிரகடனம் செய்யப்பட்ட பின்னரும் கூட அதனை நடைமுறைப்படுத்துவதற்கான சிக்கல்கள், அதிகார சபை போன்ற அதிகார பகிர்வு விடயங்களில் மலையக மக்களை உள்ளீர்க்காமை தமிமொழி சம்பந்தமாக மலையக பிரதேசங்கள் காட்டப்படும்
பாரபட்சம் குறித்தும் பேசப்பட்டதாக
தெரிவித்தார்.
அவரது கோரிக்கைகளை தூதுவர் கவனமாகக் கேட்டதுடன் எதிர்வரும் விஜயத்தின் போது மக்கள் வாழும் குடியருப்பு பகுதிகளை பார்வையிட வருமாறு விடுத்த வேண்டுகோளையும் தூதுவர் ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.