சட்ட விரோதமான முறையில் மூன்று பசு மாடுகளை வெட்டி பதுளை நோக்கி கொண்டு செல்கையில் பசறை பொலிஸாரினால் இருவர் கைது.
பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அத்கம் நிவாச வீதியில் முச்சகர வண்டி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் மூன்று பசு மாடுகளை வெட்டி கொண்டு செல்கையில் பசறை பொலிஸாரினால் முச்சக்கர வண்டி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன் போது 324 கிலோகிராம் மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது. 24, 28 வயதுடைய பசறை பகுதியைச் சேர்ந்த இருவர் பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு முச்சகர வண்டியையும் பசறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் இன்று அதிகாலை 4.35மணியளவில் இடம்பெற்றுள்ளதோடு குறித்த இரண்டு சந்தேக நபர்களையும் முச்சகர வண்டியையும் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
ராமு தனராஜா