ஹட்டன் பிரதேசத்தை சேர்ந்த பெருந்தோட்ட நிறுவங்களை சார்ந்த முகாமையாளர்களுக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை (16)டிக்கோயா தரவளை பெருந்தோட்ட முகாமையாளர் கழக கேட்போர் கூடத்தில் இடம்பெறவிருக்கின்றது.
குறித்த கலந்துரையாடலில் பெருந்தோட்ட மக்களுக்கு இடம்பெறுகின்ற மனித உரிமை மீரல்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவிருகின்றது.
மேலும் கூட்டத்திற்கு இலங்கை மனித உரிமை அணைக்குழுவின் தவிசாளரும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசருமான தெல்தெனிய உட்பட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரிகளும் கலந்துகொள்ளவிருக்கின்றனர்,மேலும் பெருந்தோட்டங்களை சார்ந்த 58 முகாமையாளர்களுக்கும் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
