வி.தீபன்ராஜ்
நுவரெலியவில் மீண்டும் பேருந்து விபத்து 20 பேர் வைத்தியசாலையில் அனுமதி
நுவரெலியவில் மற்றுமொரு தனியார் பேருந்து ( 23) விபத்து ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த விபத்தில் 20 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த அனைவரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்து குறித்து மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
