Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டன் நகரில் ஆடை விற்பனை நிலையத்தில் திருட்டு – சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது

November 25, 2026

கினிகத்தேனை பகுதியில் கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்து சாரதிக்கு காயம்

November 25, 2026

இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை

November 24, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பசறை – 13 வயது சிறுமி துஸ்பிரயோகம் 28 வயது பேருந்து நடத்துனர் கைது
Breaking

பசறை – 13 வயது சிறுமி துஸ்பிரயோகம் 28 வயது பேருந்து நடத்துனர் கைது

ThanaBy ThanaMay 25, 2025No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கடந்த 21 ம் திகதி மதியம் காணமல் போன சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் பசறை பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாகவும் அத்துடன் சந்தேக நபர் ஒருவர் தலைமறைவாகி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

பசறை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 13 வயது 4 மாதங்களும் உடைய சிறுமியே இவ்வாறு துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த 21 ம் திகதி பாடசாலைக்கு செல்லாமல் கோழிகளுக்கான உணவை கொள்வனவு செய்வதற்காக மதியம் 1.00 மணியளவில் பசறை நகருக்கு சென்ற தனது மகள் வீடு திரும்பவில்லை என பசறை பொலிஸ் நிலையத்தில் கடந்த 21 ம் திகதி இரவு 10.05 மணியளவில் குறித்த சிறுமியின் தந்தையினால் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

முறைப்பாட்டிற்கு அமைய உடன் விசாரணைகளை மேற்கொண்ட பசறை பொலிஸார் குறித்த சிறுமி பசறை பகுதியில் லயன் குடியிருப்பு வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பின்னர் சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, தான் பசறை நகருக்கு வந்த போது பேருந்து ஒன்றின் நடத்துநருடன் சிநேகிதம் ஏற்பட்டுள்ளதாகவும், பின்னர் குறித்த நபரின் வேண்டுகோளுக்கு இணங்க குறித்த நபரின் வீட்டுக்கு குறித்த நபருடன் சென்றதாகவும் , நபரின் வீட்டில் யாரும் இருக்கவில்லை என்வும், இதன்போது குறித்த  நபர் தன்னிடம் தவராக பொலிஸாரிடம் சிறுமி கூறியுள்ளார்.

சிறுமி பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக பரிசோதனைகளுக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது தலைமறைவாகி இருந்த சந்தேக நபர் பதுளை பேருந்து தரிப்பிடத்தில் இருப்பதாக பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.எம்.பியரட்ணவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸ் குழுவினர் உடன் பதுளை பேருந்து தரிப்பிடத்திற்கு விரைந்து , பதுளை பேருந்து தரிப்பிடத்தில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பதுளை பொலிஸ் நிலைய அதிகாரிகளின் உதவியுடன் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 28 வயதுடைய பசறையை சேர்ந்தவர் ஆவார்.

சந்தேக நபரை நேற்றைய தினம் (24/05) பசறை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது (05/06) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஹட்டன் நகரில் ஆடை விற்பனை நிலையத்தில் திருட்டு – சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது

    November 25, 2026

    கினிகத்தேனை பகுதியில் கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்து சாரதிக்கு காயம்

    November 25, 2026

    இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை

    November 24, 2026

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் .

    November 24, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.