நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் இடம்பெற்ற நுவரெலியா வலய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான (16 வயதுக்கு உட்பட்டோர்) உதைப்பந்தாட்ட போட்டியில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம் வெற்றிபெற்றுள்ளது.
குறித்த இறுதி போட்டியில்
சென் சேவியர் பாடசாலையை எதிர்கொண்ட கொட்டகலை பாடசாலை அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மாகாண மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அணியின் பயிற்றுவிப்பாளராக ஆசிரியர் ராமர் திவாகரன் கடமையாற்றி இருந்தது குறிப்பிடத் தக்கது.
