இரத்தினபுரி கலத்துர வள்ளுவர் தமிழ் வித்தியாலய சாதாரண தர மாணவர்களுக்கான ஆற்றுப்படுத்தல் செயல்முறை பயிற்சி செயல் திட்டம் இன்று(12/02/23) பாடசாலையில் அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த செயல்திட்டமானது அமரர் ம .சனோஜ் குமார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஒழுங்குசெய்யப்பட்டது.
நிகழ்வுக்கான அனுசரணையை அமரர் ம .சனோஜ் குமாரின் சகோதரரும் Kids and Teens அமைப்பின் பணிப்பாளருமான செ .கிஷோகுமார் வழங்கி இருந்தார்.
இந்தவருடம் சாதாரண தரப் பரீட்சைக்கு மாணவர்களை உள ரீதியில் தயார்படுத்தும் விதமாக செயல்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வுக்கு மலையகம் .lk முழுமையான ஊடக அனுசரணையை வழங்கியதோடு, வளவாளர்களாக
Unlock நிறுவனத்தின் பணிப்பாளர் பொஸ்கோ ராஜாவும் மலையகம் மீடியா நெட் வோர்க்கின் பணிப்பாளர் தனபாலசிங்கமும் செயற்பட்டனர்.






