கொட்டகலை ஸ்டொனிக்கிளிப் ரொசிட்டா பிரிவில் ஆற்றில் விழுந்த சிறுமி உயிரிழந்துள்ளார.
குறித்த சம்பம் இன்று காலை 11மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
பூப்புனித நீராட்டு விழாவுக்கு தன் குழந்தையை தயார் படுத்திவிட்டு தாய் தயாராக வீட்டுக்குள் சென்ற சிறிது நேரத்தில் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள ஆற்றில் சிறுமி விழுந்துள்ளார்.
உடனடியாக அருகிலுள்ளவர்களின் உதவியுடன் சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
