வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட மேலும் ஒரு சந்தேக நபர் பசறை பொலிஸாரினால் கைது.
பதுளை பகுதிகளில் உள்ள பெருந்தோட்ட இளைஞர்களை இலக்கு வைத்து வெளிநாடு அனுப்புவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக பதுளை, பசறை, லுணுகலை ஆகிய பொலிஸ் நிலையங்களில் பாதிக்கப்பட்ட இளைஞர்களினால் புகாரளிக்கப்பட்டு வருகின்றது.
இதன் போது பதுளை பொலிஸ் நிலையத்தில் இதுவரையில் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது சந்தேக நபர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோடு மேலும் லுணுகலையைச் சேர்ந்த பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவரும் லுணுகலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது குறித்த அதிபரை எதிர்வரும் 23 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இதன் போது பசறை பொலிஸாரினால் 43 வயதுடைய லுணுகலை அடாவத்தைப் பகுதியை சேர்ந்த. லுணுகலை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் காவலாளியை நேற்றைய தினம் பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 23 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இருப்பினும் தற்போது பசறை, லுணுகலை, பதுளை ஆகிய பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்டவர்களினால் பண மோசடி தொடர்பாக புகாரளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ராமு தனராஜா