இரத்தினபுரி, தும்பர, நிவித்திகல கல்வி வலயத்துக்குட்பட்ட எள்ளகாவ இலக்கம் 2 தமிழ் பாடசாலையின் வரலாற்றில்
முதல் முறையாக புலமைப்பரிசில் பரீட்சையில் தனுஜா தருஷி என்ற மாணவி 146 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளதுடன், அந்தப் பாடசாலைக்கு முதல் வெற்றியையும் தேடித் தந்துள்ளார்.
இலங்அரசாங்கத்தினால் இந்த 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை இலவசக்கல்வியின் தந்தை சீ. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரவினால் 1940ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை இந்த பாடசாலையில் இதுவரை புலமைப்பரிசில் சித்தியை யாரும் பெற்றிறாத நிலையில் முதல் முறையாக தனுஜா தருசி இந்த மகத்தான வெற்றியை தனதாக்கியதில் பாடசாலை ஆசிரியர், மற்றும் மாணவர்கள் தோட்ட மக்கள் அனைவரும் பெரு மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.
தும்பரையை வதிவிடமாக கொண்ட ராஜேஸ்கண்ணா, பரமேஸ்வரியின் அன்பு மகளான தனுஜா தருஷி தனியார் வகுப்புகளுக்கு செல்லாமல் முழுக்க முழுக்க பாடசாலை கல்வியை மட்டுமே பயின்று இந்த வெற்றியை பெற்றிருப்பதால்,
இவரின் வகுப்பாசிரியை சுபாஷினியை ஊர் மக்கள் பாராட்டி வருகிறார்கள்.
தும்பர இலக்கம் இரண்டில் அமையப்பெற்றுள்ள இந்த தமிழ் பாடசாலை பழைய தேயிலை கொழுந்து நிறுக்கும் கட்டடத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
மணி சிறிகாந்தன்