மலையக பெருந்தோட்ட பகுதிகளில் மிருகங்களை வேட்டையாடும் நோக்குடன் சிலரால் மிண் சாரம் பாச்சும் வலை மற்றும் அக்க பட்டாஸுகள் ஆகியன பயன்படுத்ப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக காட்டு மிருகங்கள் அழிவடைந்து வரும் நிலையில் அனர்தங்களும் அதிகரித்து வருகிறன.
இந்தநிலையில் ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்கு உற்ப்பட்ட ஹேவாஹேட்ட ஓப் கீழ் பிரிவு மக்கள் குடியிருப்பு அண்டிய பகுதியில் நேற்று இரவுவில் திடீரென வெடி சத்தம் கேட்டதில் வீட்டு உரிமையாளர் வெடிச்சத்தம் கேட்ட இடத்தை சென்று பார்த்த போது தனது வளர்ப்பு நாய் தலை தெரித்து சிதரி கிடந்தாக தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை ஹங்குராங்கெத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
