வி.தீபன்ராஜ்
நுவரெலியாவில் வழமைக்கு திரும்பிய தபால் சேவை
தபால் திணைக்கள ஊழியர்கள் மேற்கொண்ட 7நாள் வேலைநிறுத்தம் முடிவிற்கு வந்ததை அடுத்து தபாலகங்கள் இய ல்பு நிலைக்குத் திரும்பியுள்ளநிலையில் நுவரெலியா தபால் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன..
நாடளவா ரீதியில் கடந்த 7 நாட்களாக 19 கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இரண்டாவது கைரேகை மற்றும் கூடுதல் நேர கொடுப்பனவு உள்ளிட்ட பிற பிரச்சினைகளில் எந்த மாற்றங்களையும் செய்ய அமைச்சர் உடன்படவில்லை என்றும், இது தொடர்பாக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் எதிர்காலத்தில் தற்போதுள்ள சட்டத்தின்படி விவாதிக்கப்படுள்ளது
இந் நிலையில் நேற்று பிற்பகலுடன் இவர்களின் வேலைநிறுத்த போராட்டம் முடிவிற்கு வந்ததை அடுத்து தபால் சேவைகள் மீண்டும் இன்று வழ மைக்கு திரும்பியுள்ளன.
7 நாட்களாக பொதுமக்கள் தமது தேவைகளை நிறைவேற்றுவதில் தடங்கல் ஏற்பட்டமையால் இன்றைய தினம் அதிகள வான பொதுமக்கள் அஞ்சல் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்து தமது தேவைகளை பூர்த்தி செய்வதை காணக்கூடியதாக உள்ளது.
இதே வேளை நுவரெலியாவில் அமைக்கப்பட்டுள்ள தபால் பெட்டியினுள் வெற்றிலை எச்சில் துப்பப்பட்ட நிலையில் கடிதங்கள் மீட்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
