புசல்லாவ, டெல்டா தோட்டத்தில் அமைந்துள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குழாயில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (1/09) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் புசல்லாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
