கடந்த ஆண்டு நடைபெற்ற 6ஆவது கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சையின் இரண்டாம் கட்டத்தில் மூவாயிரத்து 950 பேர் சித்தியடைந்துள்ளனர்.
உற்பத்தித் துறையுடன் தொடர்புடைய இந்தப் பரீட்சை கடந்த ஜூலை மாதம் 4ஆம் திகதி முதல் இம்மாதம் 3ஆம் திகதி வரை ஒன்லைன் மூலம் நடத்தப்பட்டது.
இதற்கு 24 ஆயிரத்து 378 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்திருந்த போதிலும்இ 18 ஆயிரத்து 269 விண்ணப்பதாரர்களே பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். இந்த தேர்வு முடிவுகளை றறற.ளடடிகந.டம இணையதளத்தின் ஊடாக அறிந்து கொள்ள முடியும். பரீட்சையில் சித்தியடைந்தோருக்கான நேர்முகப் பரீட்சை மற்றும் மருத்துவப் பரிசோதனைக்கான திகதி எதிர்வரும் தினங்களில் அறிவிக்கப்படும்..