வி.தீபன்ராஜ்
நுவரெலியாவில் லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – இளைஞன் பலி
நுவரெலியா உடப்புசல்லாவ பிரதான வீதியில் லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதுண்டதில் மோட்டார் சைக்கிள் பணித்த இளைஞர் பலியாகியுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு (21) ஞாயிற்றுக்கிழமை 9.30 மணியளவில் நுவரெலியா உடப்புசல்லாவ ஹவா எலியா பகுதியில் பயணித்த மோட்டார் சைகளுடன் அதற்கு எதிர்த்திசையில் பயணித்த லோரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானதுநுவரெலியா ஹவா எளிய பகுதியில் இடம்பெற்றதுடன், இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 20வயதுடைய இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் குறித்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணையை நுவரெலியா பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதேவேளை குறித்த லாரியின் சாரதி கைதுசெய்யபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
