Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பிஸ்கட் வாங்கச் சென்ற 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 65 வயது வர்த்தகர் மாதம்பேயில் கைது

June 13, 2026

உத்தேச கல்விச் சீர்திருத்தக் கொள்கைக் கட்டமைப்பு உருவாக்கப் பணிகளை ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்யுமாறு தேசிய கல்வி ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

June 13, 2026

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கான குழு

June 13, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » உயர் கல்விப் பிரிவு பற்றிய உப குழுவிற்கும் பல்கலைக்கழக உபவேந்தர்களுடன் இடையில் விசேட கலந்துரையாடல்
இலங்கை

உயர் கல்விப் பிரிவு பற்றிய உப குழுவிற்கும் பல்கலைக்கழக உபவேந்தர்களுடன் இடையில் விசேட கலந்துரையாடல்

ThanaBy ThanaSeptember 27, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
உயர் கல்விப் பிரிவு பற்றிய உப குழு பல்கலைக்கழக உபவேந்தர்களுடன் இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்கள் தொடர்பான பல விடயங்கள் குறித்து கலந்துரையாடல் மேற்கொண்டது.

 இந்த உப குழு பிரதி அமைச்சர் (வைத்தியர்) மதுர சேனவிரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (23) பாராளுமன்றத்தில் கூடிய போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, இயலாமையுள்ள மாணவர்களை பல்கலைக்கழகங்களில் சேர்ப்பதற்குத் தேவையான கொள்கையைத் தயாரிப்பது தொடர்பில் உப குழுவின் கவனம் செலுத்தப்பட்டதுடன் அந்தக் கொள்கையின் வரைவு ஏற்கனவே தயாரிக்கப்பட்டு முடிந்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியது. அதற்கமைய, அந்த வரைவு பல்கலைக்கழக உபவேந்தர்களுக்கு வழங்கப்படும் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், தேசிய மட்டத்தில் சாதனைகளைப் படைக்கும் மாணவர்களுக்குப் பல்கலைக்கழகக் கல்வியை வழங்குவதற்கான திட்டம் ஒன்றை தயாரிப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. மேலும், வெளிவாரிப் பட்டங்களைப் பெறும் பட்டதாரிகளை தொழிற் சந்தையில் நிலைநிறுத்துவது குறித்தும் குழு, பல்கலைக்கழக உபவேந்தர்கள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதிகாரிகளுடன் கலந்துரையாடியது. குறிப்பாக, வெளிவாரிப் பட்டங்களின் தரம் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றின் தரத்தை நிலையான முறையில் பேணுவதற்குத் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், பல்கலைக்கழகங்களின் தற்போதைய தேவைக்கேற்ப கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்குத் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் இந்த உப குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன், இதன்மூலம் உயர் கல்வித் பிரிவு தொடர்பான விடயங்களை ஆராய்ந்து அறிக்கையிடப்படவுள்ளது.
இந்த உப குழுக் கூட்டத்தில் பிரதி அமைச்சர் உபாலி பண்ணிலகே, கௌரவ பாராளுமன்ற
உறுப்பினர்களான ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, நிமல் பலிஹேன மற்றும் மஞ்சுள சுகத் ரத்நாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பிஸ்கட் வாங்கச் சென்ற 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 65 வயது வர்த்தகர் மாதம்பேயில் கைது

    June 13, 2026

    உத்தேச கல்விச் சீர்திருத்தக் கொள்கைக் கட்டமைப்பு உருவாக்கப் பணிகளை ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்யுமாறு தேசிய கல்வி ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

    June 13, 2026

    ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கான குழு

    June 13, 2026

    ஜனாதிபதிக்கும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் (CHEC) தலைவருக்கும் இடையில் சந்திப்பு

    June 13, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.