இளம் பெண்களுக்கு சினிமா மற்றும் தொலைக்காட்சியில் வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி, மூத்த திரைப்பட இயக்குனர் ஒருவராக நடித்து, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் நிதி மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு, ஒத்திவைக்கப்பட்ட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தலைமை நீதிபதி அசங்க எஸ். போதரகம இந்த தண்டனையை விதித்துள்ளார்.
இதன்படி, பத்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட கடின உழைப்புடன் கூடிய எட்டு மாத கடுங்காவல் சிறைத்தண்டனையை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
குற்றவாளியாகக் காணப்பட்ட பிரதிவாதி, நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்டதன் அடிப்படையிலும், தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதன் அடிப்படையிலும், இந்த மென்மையான தண்டனை விதிக்கப்பட்டதாகத் தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.
எனினும் அவருக்கு எதிர்காலத்தில் அரசுப் பணிக்கான எந்தவொரு பரிசீலனையும் அனுமதிக்கப்படாது என்பதை நீதிபதி அறிவித்தார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொது பட்டமளிப்பு விழாவில்,நுவரெலியா மாவட்டம் ஹட்டன் டன்பார் தோட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி தர்ஷினி அவர்கள் தொழிநுட்ப துறையில் Bachelor of biosystems technology in agricultural technology and entrepreneurship
எனும் பட்டம் பெற்று தன் கல்வி சாதனையை பதிவு செய்துள்ளார். இவர் தனது பாடசாலை கல்வியை நு/ஹ, பன்மூர் த.ம.வி மற்றும் நு/ஹ, நோர்வூட் த.ம.வி யிலும் பயின்றார்.
