Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தென் கொரியாவில் கோர விபத்து: மலையகத்தின் ராகலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் உட்பட இரு இலங்கையர்கள் உயிரிழப்பு!

November 28, 2026

நட்டத்தில் இயங்கிய கடற்றொழில் நிறுவனங்கள் இன்று இலாபத்தில் – எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பதிலடி

November 27, 2026

திட்வா பேரிடர்: பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் 

November 27, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » TikTok இன் 2025 இரண்டாவது காலாண்டுக்கான சமூக வழிகாட்டுதல் நடைமுறைப்படுத்தல் அறிக்கை
இலங்கை

TikTok இன் 2025 இரண்டாவது காலாண்டுக்கான சமூக வழிகாட்டுதல் நடைமுறைப்படுத்தல் அறிக்கை

ThanaBy ThanaOctober 25, 2025No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

TikTok இன் 2025 இரண்டாவது காலாண்டுக்கான
சமூக வழிகாட்டுதல் நடைமுறைப்படுத்தல் அறிக்கை வெளியீடு.

TikTok நிறுவனம் 2025 இரண்டாம் காலாண்டிற்கான சமூக வழிகாட்டுதல் நடைமுறைப்படுத்தல்
அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, பயனர்களுக்கு பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை
உருவாக்குவதில் நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. 2025 ஏப்ரல் முதல்
ஜூன் வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய இந்த அறிக்கையில், TikTok தனது சமூக வழிமுறைகளை
மீறும் உள்ளடக்கங்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு அகற்றுவதற்கான நடவடிக்கைகள் விரிவாக
விளக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், உலகெங்கிலும் உள்ள பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை
வழங்குவதற்கான முயற்சியை நிறுவனம் உறுதிப்படுத்துகிறது.
2025ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், TikTok நிறுவனம் இலங்கையில் சமூக வழிகாட்டு
நெறிமுறைகளை மீறிய 1,438,046 வீடியோக்களை அகற்றியுள்ளது. இதில் 99% முன்னெச்சரிக்கை
நீக்கமாகவும், 79% வீடியோக்கள் 24 மணி நேரத்திற்குள் அகற்றப்பட்டனவாகவும், 1,108,371 வீடியோக்கள்
தானியங்கி கண்காணிப்பு மற்றும் கண்டறியும் தொழில்நுட்பங்களின் (automated detection technologies)
உதவியுடனும் நீக்கப்பட்டுள்ளன.
உலகளவில், TikTok நிறுவனம் இந்த காலாண்டில் 189 மில்லியன் (189,578,228) வீடியோக்களை
நீக்கியுள்ளது. இது தளத்தில் பதிவேற்றப்படும் மொத்த உள்ளடக்கத்தில் 0.7 சதவீதமாகும். அகற்றப்பட்ட
காணொளிகளில், 163,962,241 வீடியோக்கள் தானியங்கி தொழில்நுட்பங்கள் மூலம் கண்டறியப்பட்டு
நீக்கப்பட்டன. அதே நேரத்தில் 7,457,309 வீடியோக்கள் மேலதிக ஆய்வுக்குப் பின் மீண்டும் தளத்தில்
சேர்க்கப்பட்டன. முன்னெச்சரிக்கை அடிப்படையிலான நீக்க விகிதம் 99.1% ஆகவும், குறியிடப்பட்ட
உள்ளடக்கத்தில் 94.4% பதிவிடப்பட்ட 24 மணிநேரத்திற்குள் நீக்கப்பட்டதாகவும் உள்ளது. இதனிடையே,
TikTok தளத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த, இந்த காலாண்டில் 76,991,660 போலி கணக்குகளை
நீக்கியதோடு, 13 வயதுக்குட்பட்டவர்களுக்குச் சொந்தமானதாக சந்தேகிக்கப்பட்ட 25,904,708
கணக்குகளையும் நீக்கியுள்ளது.
இந்த அறிக்கையின்படி, அகற்றப்பட்ட மொத்த வீடியோக்களில் குறிப்பிடத்தக்க அளவான 30.6 சதவீத
வீடியோக்கள் TikTok-இன் உள்ளடக்க விதிமுறைகளுக்கு ஒவ்வாத உணர்வுபூர்வமான அல்லது
வயதுக்கேற்ற பொருத்தமற்ற தலைப்புகளைக் கொண்டிருந்தன. மேலும் 14.0 சதவீத காணொளிகள்
தளத்தின் பாதுகாப்பு மற்றும் நாகரிக நெறிமுறைகளை மீறியதாகவும், 6.1 சதவீதம் தனியுரிமை மற்றும்
பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மீறியதாகவும் கண்டறியப்பட்டது. மேலும், நீக்கப்பட்ட வீடியோக்களில்
45.0 சதவீதம் தவறான தகவல்களைக் கொண்டிருந்ததாகவும், 23.8 சதவீதம் திருத்தப்பட்ட ஊடகப்
பொருட்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களாகவும் அடையாளம்
காணப்பட்டன.
சமூக வழிகாட்டுதல் நடைமுறைப்படுத்தல் அறிக்கையின் தொடர் வெளியீடு, உள்ளடக்கம் மற்றும் பயனர்
கணக்குகள் மீதான நடவடிக்கைகளின் அளவு மற்றும் இயல்பு குறித்த பார்வைகளை வழங்குகிறது. இது
முழுமையான வெளிப்படைத்தன்மை மீதான TikTok நிறுவனத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
2025 முதல் காலாண்டு அறிக்கை பற்றிய விரிவான தகவல்களைப் பெறவும், TikTok-இன் உள்ளடக்க
வழிகாட்டுதல்கள், கருவிகள் மற்றும் கொள்கைகள் குறித்து மேலும் அறிந்துகொள்ளவும், TikTok-இன்
வெளிப்படைத்தன்மை மையத்தை (Transparency Centre) பார்வையிடவும்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நட்டத்தில் இயங்கிய கடற்றொழில் நிறுவனங்கள் இன்று இலாபத்தில் – எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பதிலடி

    November 27, 2026

    சாமர சம்பத் தசநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

    November 27, 2026

    ‘டிட்வா’ சூறாவளி ஓராண்டு நினைவு: உயிரிழந்தோருக்கு பாராளுமன்றத்தில் மௌன அஞ்சலி

    November 27, 2026

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

    November 27, 2026
    Editors Picks

    தென் கொரியாவில் கோர விபத்து: மலையகத்தின் ராகலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் உட்பட இரு இலங்கையர்கள் உயிரிழப்பு!

    November 28, 2026

    நட்டத்தில் இயங்கிய கடற்றொழில் நிறுவனங்கள் இன்று இலாபத்தில் – எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பதிலடி

    November 27, 2026

    திட்வா பேரிடர்: பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் 

    November 27, 2026

    சாமர சம்பத் தசநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

    November 27, 2026

    தென் கொரியாவில் கோர விபத்து: மலையகத்தின் ராகலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் உட்பட இரு இலங்கையர்கள் உயிரிழப்பு!

    November 28, 2026

    நட்டத்தில் இயங்கிய கடற்றொழில் நிறுவனங்கள் இன்று இலாபத்தில் – எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பதிலடி

    November 27, 2026

    திட்வா பேரிடர்: பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் 

    November 27, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.