‘டிட்வா’ சூறாவளி தாக்கி ஓராண்டு நிறைவடையும் நிலையில், அதில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து இன்று முற்பகல் பாராளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் திகதி உருவான இந்தச் சூறாவளியால், 24 மணி நேரத்தில் 540 மில்லிமீற்றர் வரை மழை பெய்ததில் 22 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மண்சரிவு, காற்று மற்றும் வெள்ளத்தால் வீடுகள், வீதிகள் மற்றும் விவசாய நிலங்கள் சேதமடைந்ததோடு, 650-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; சுமார் 173 பேர் காணாமல் போயினர்.
