(தேற்றாத்தீவு)
மஹா சிவராத்திரி விரத சிறப்பு நிகழ்வுகள் தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் சனிக்கிழமை (18) காலை முதல் சிறப்பாக நடைபெற்றது. கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்திற்கு சித்தர்களால் நர்மதா நதிக்கரையில் இருந்து கொண்டு வரப்பட்டுபிரதிஸ்டை பண்ணப்பட்டிருக்கும் உயிர் லிங்கத்திற்கு அடியார்கள் ஆலய புனித கங்கையாகிய பாலாறு ‘பால புஸ்கரணி’ தீர்த்தக்கங்கையில் தீர்த்த நீர் எடுத்துவந்து தங்கள் கைகளினால் அபிஷேகம் பண்ணும் சிறப்பு நிகழ்வு காலை தொடக்கம் நள்ளிரவு வரை இடம் பெற்றது.

இதன் போது தங்களது ராசிகளுக்குரிய அபிஷேக திரவியங்களாலும் அபிஷேகம் பண்ணுவதற்குரிய ஒழுங்குகள் செய்யப்பட்டு இருந்தன.
மேலும் ஆலயத்தில் நான்கு சாமப் பூஜைகளும் லிங்கோற்பவர் காலத்தில் ஏகாதச ருத்ர மஹா வேள்ளியும் இடம்பெற்றிருந்தது .மாலை 6 மணி தொடக்கம் அதிகாலைவரை பஜனை சங்கீதக்கச்சரி நடனம்கதாப்பிரசங்கம் சமய பேருரைகள் என்பன இடம் பெற்றது. அத்துடன் 2005 ஆண்டுகல்விப் பொதுதராதர சாதாரண தரப் மாணவர்களின் ஏற்பாட்டில் 10 அடி உயரமான தென்னை ஓலையால் வடிவமைக்கப்பட்ட சிவலிங்கம் இதன் போது காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.
