இந்திய பெருங்கடலில் வெப்பமண்டல சூறாவளி உருவாகியிருப்பதாக சர்வதேச விண்வெளி நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் இந்தியப் பெருங்கடல் தீவான மொரிஷியசை நோக்கி நகருகிறது. புயல் இன்று (21) மொரிஷியசை தாக்கும் என்றும், சூறாவளியால் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும், மொரிஷியஸ் நேரடி அச்சுறுத்தலை எதிர் கொண்டுள்ளதாகவும் அந்நாட்டு வானிலை ஆய்வு மத்திய நிலையம் எச்சரித்துள்ளது.
சூறாவளி புயல் ஒரு பயங்கரமான சூறாவளியாக மாற்றமடைந்து தாக்கங்களை ஏற்படுத்தும் எனவும் கனமழை வெள்ளம் ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அதிபயங்கர சூறாவளியால் தென் ஆப்பிரிக்கா, மாலாவி, ஜாம்பியா, போட்ஸ்வானா உள்ளிட்ட பகுதிகளிலும் மழை, சூறைக்காற்று வீசும் என கூறப்பட்டுள்ளது. புயலின் கண் பகுதி வேகமாக நகரும் வீடியோவை சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் வெளியிட்டுள்ளது.