நுவரெலியா மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டும் தங்களது வியாபாரங்களை பிரதேச செயலகங்களில் வியாபார பதிவின் கீழ் பதிவு செய்யாததன் விளைவாக அரசு வழங்கும் இரண்டு இலட்சம் ரூபா இழப்பீட்டு தொகையை பலருக்கு பெறமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
அதேபோல விவசாயிகள் பிரதேச செயலகத்தில் முறையாகப் பதிவு செய்யப்படாத காரணத்தால், அவற்றுக்கு எவ்வித இழப்பீடும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கால்நடைப் வைத்திருப்போரும் : இதேபோல, பதிவு செய்யப்படாத கால்நடைகளின் இழப்புகளுக்கும் தங்களால் இழப்பீடு பெற முடியவில்லை எனப் கால்நடைகளை வைத்திருப்போர் கவலையடைந்துள்ளனர்.
நுவரெலியா உட்பட அதன் அண்டிய பகுதிகளில் உள்ள பல சிறு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், முறைப்படி ‘பிஆர்’ (Business Registration) வியாபார பதிவு செய்யாத காரணத்தால், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 2 லட்சம் ரூபாய் வரையிலான இழப்பீட்டுத் தொகையை வழங்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது,இது குறித்து தெரிவதாவது பிரதேச செயலக அதிகாரிகள், அரசு விதிகளின்படி முறையான ஆவணங்கள் மற்றும் பதிவுகள் இருந்தால் மட்டுமே இழப்பீடு வழங்க முடியும் எனத் தெரிவித்துள்ளனர். மேலும் தோட்ட பகுதிகளில் தோட்ட முகாமைத்துவம் சிறு வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபர பதிவிற்கு தேவையான கடிதங்களை வழங்காமையும் ,சிலர் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் இடங்களில் சிறு கடைத்தொகுதிகளை வைத்திருப்போருக்கு வியாபார பதிவுகளை செய்ய முடியாமல் போனதன் காரணமும் இதில் உள்ளடங்கும்.
இது தொடர்பில் “முறையான நில ஆவணங்கள் அல்லது வணிகப் பதிவுகள் இல்லாமல் இழப்பீடுகளை வழங்குவதில் சட்டரீதியான சிக்கல்கள் உள்ளன,” என அதிகாரி ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
