இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையத்தினால் இன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வானிலை குறித்த தகவல்கள் வருமாறு:
பொதுவான நிலைமை: நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும்.
நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் தரைப்பனி (Ground frost) ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
மூடுபனி: மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் மூடுபனி நிலவக்கூடும்.
