Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையகத்தில் ‘கே.டானியல் 100’

October 16, 2026

நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

October 15, 2026

வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

October 15, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை, குறைந்த செலவிலேயே வழங்குகின்றன – ஆளுநர்
இலங்கை

இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை, குறைந்த செலவிலேயே வழங்குகின்றன – ஆளுநர்

ThanaBy ThanaJanuary 21, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை, பெரும்பாலான மேற்குலக நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களின் செலவில் நான்கில் ஒரு பங்கு செலவிலேயே வழங்குகின்றன. இது உயர்தரக் கல்வியை எமது சமூகம் இலகுவாகப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக மாற்றுகின்றது. இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் அனுசரணையில், சிகரம் அக்கடமி மற்றும் சேப் (SAPE) நிறுவனம் இணைந்து நடாத்திய ‘இந்தியாவில் கல்வி’ (Study in India) கல்வி வழிகாட்டல் கண்காட்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்று திங்கட் கிழமை காலை (19.01.2026) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் விருந்தினராகக் கலந்து கொண்ட ஆளுநர் கண்காட்சியைப் பார்வையிட்ட பின்னர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது,

இந்த நிகழ்வானது ஒரு சாதாரணக் கண்காட்சி மட்டுமல்ல. இது எமது இளைஞர்கள் உலகத்தரம் வாய்ந்த கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு நுழைவாயில். அத்தோடு, இது வலுவடைந்து வரும் ‘இந்தியா – இலங்கை அறிவுசார் பங்காண்மையின்’ ஒரு சான்றாகவும் திகழ்கின்றது.

இந்தியா இன்று உலகின் இரண்டாவது மிகப்பெரிய கல்வி மையமாகத் திகழ்கின்றது. அங்கு ஏறத்தாழ 1,300 பல்கலைக்கழகங்களும் 75,000 கல்லூரிகளும் உள்ளன. இங்குள்ள யாழ்ப்பாண மாணவர்களுக்கு, முதன்மையான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கான ஓர் அரிய வாய்ப்பை இந்தக் கண்காட்சி வழங்குகின்றது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 2,500 ஆண்டுகளுக்கும் மேலான கலாசார மற்றும் வரலாற்றுத் தொடர்புகள் உள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து செல்லும் ஒரு மாணவருக்கு, இந்தியாவில் கல்வி கற்பது அதிகபட்ச கலாசார இணக்கப்பாட்டையும், ஒரு இணக்கமான சூழலையும் வழங்குகின்றது.

எமது பிராந்தியம் ஏற்கனவே வலுவான பழைய மாணவர் தடம் ஒன்றைக் கொண்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் இராமநாதன் நுண்கலைக் கல்லூரி ஆகியவற்றின் பல விரிவுரையாளர்கள், இந்தியாவில் தமது பயிற்சியைப் பெற்ற பெருமைமிக்க ஐ.சி.சி.ஆர். புலமைப்பரிசில் பெற்றவர்கள்.

இந்திய அரசாங்கம் இலங்கை மாணவர்களுக்காக ஆண்டுதோறும் ஏறத்தாழ 800 புலமைப்பரிசில்களை வழங்குகின்றது. இவை இளங்கலை, முதுகலை மற்றும் செவ்வியல் இசை, நடனம் போன்ற விசேட துறைசார் பயிற்சிகளையும் உள்ளடக்கியுள்ளன.

இந்தக் கண்காட்சியானது ‘நம்பிக்கையின் புதிய பாலமாக அறிவு’ அமையப் பெறுவதற்கான ஒரு மேடையாகும். இந்தியாவில் கல்வி கற்கத் தெரிவு செய்வதன் மூலம், எமது மாணவர்கள் வெறும் பட்டத்தை மட்டும் பெறவில்லை. அவர்கள் எமது முழுப் பிராந்தியத்தின் எதிர்காலத்தையும் முன்னெடுத்துச் செல்லும் கருத்துக்கள் மற்றும் புத்தாக்கங்களின் இருவழிப் பரிமாற்றத்தில் பங்குகொள்கின்றனர்.

ஒன்றாக இணைந்து, பாக்கு நீரிணையை ஒரு ‘அறிவுசார் நீரிணையாக’ மாற்றுவோம். பகிரப்பட்ட கற்றல் மற்றும் வளர்ச்சியின் ஊடாக எமது சிறந்த அறிவாளிகள் அங்கு வளம் பெறட்டும், என்றார்.

இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் ஒரே கூரையின் கீழ் அணிதிரண்டிருந்தன.

இந்த நிகழ்வில் இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய் முரளி அவர்களும் இந்தியத் தூதரக அதிகாரிகளும், இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பிரதிநிதிகள், மாணவர்கள், பெற்றோர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

 

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையகத்தில் ‘கே.டானியல் 100’

    October 16, 2026

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026

    வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

    October 15, 2026

    நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

    October 15, 2026
    Editors Picks

    மலையகத்தில் ‘கே.டானியல் 100’

    October 16, 2026

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026

    வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

    October 15, 2026

    பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நவம்பர் 15 க்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் -கொட்டகலை பிரதேச சபை தலைவர்  

    October 15, 2026

    மலையகத்தில் ‘கே.டானியல் 100’

    October 16, 2026

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026

    வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

    October 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.