ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இன்று செவ்வாய்க்கிழமை (03) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
ஏற்கெனவே அழைப்பாணை விடுக்கப்பட்டது. இதன்போது, அவர் நாட்டில் இல்லாத காரணத்தினால், மற்றுமொரு திகதியை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவே இன்று செவ்வாய்க்கிழமை (03) அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
