மதுகம வாழ் மலையக மக்கள் தொடர்பான மனித உரிமை சார் பிரச்சனைகளை கேட்டறியும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட மக்கள் சந்திப்பு: பிரதேச செயலக மண்டபத்தில் நாளை இடம்பெறுகின்றது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) மதுகம பிரதேச பெருந்தோட்ட மக்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இந்த சந்திப்பு மதுக பிரதேச செயலகத்தின் பிரதான மண்டபத்த்தில் நாளை காலை -2026 பெப்ரவரி 07 ஆம் திகதி சனிக்கிழமை.
காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை இடம்பெறவுள்ளது.
இந்த மக்கள் சந்திப்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பலரும் கலந்துகொள்ள உள்ளனர். மதுகம பிரதேச மக்களின் மனித உரிமை சார்ந்த பிரச்சினைகளை கேட்டறிவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
குறித்த நிகழ்வை இன்ஸ்டிட் போர் பீப்பல் எங்கேஜ்மென்ட் நெட்வொர்க்கிங் நிறுவனம் (iPEN) &
பெருந்தோட்ட மக்கள் குரல் அமைப்பு (VOPP)ஆகியன ஒழுங்கு செய்துள்ளன.