ஹட்டனில் உழுந்து வடையில் பூச்சியும் ,சேவியட் பேப்பரும்.
ஹட்டனில் உள்ள நோர்வூட் பிரதேச செயலாளர் அலுவலகத்தில் கடந்த 23.2.2026 திங்கட்கிழமை அன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பங்கேற்ற அலுவலர்களுக்கு வழங்குவதற்காக ஹட்டனில் பிரபலமான ஹோட்டலில் 35 உழுந்து வடைகள் வாங்கப்பட்டு தேனீர் இடைவேளையின் போதுவழங்கப்பட்டுள்ளது.
சகலரும் வடையை சாப்பிட்ட போது ஒரு அதிகாரி வடையினுள் இறந்த பூச்சி ஒன்று இருப்பதை கண்டுள்ளார்.
மற்றொரு அதிகாரி வடையினுள் சேவியட்
பேப்பர் துண்டு இருப்பதை கண்டுள்ளார்.
இந்த விடயம் பிரதேஸ செயளாலருக்கு
அறிவிக்கப்பட்டது.
பிரதேச செயலாளர் இந்த விடயத்தை நகர சபைக்கு முறையிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து அம்பகமுவ சுகாதார அதிகாரிகள் வடையை பரிசோதித்த போது வடையில் சேவியட் பேப்பரும் பூச்சியும் இருப்பதை கண்டுள்ளனர்.
அதன் பின்னர் சுகாதார அதிகாரிகளும் கிராம உத்தியோகத்தரும் பிரதேச செயலக அதிகாரிகளும் குறித்த ஹோட்டலுக்கு சென்று பரிசோதித்து உள்ளனர்.
இதன் போது உணவு சட்டத்தை மீறிய குற்றசாட்டின் கீழ் 25.02.2026 புதன்கிழமை இன்று சுகாதார அதிகாரிகளினால் ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஹோட்டலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
ஹோட்டல் தரப்பினர் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் நீதிமன்றத்தினால் தண்டப்பணம் விதித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் நகர சபையில் நிரந்தரமான பொது சுகாதார பரிசோதகர்களின் வெற்றிடம் காணப்படுவதால் அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய சுகாதார பரிசோதகர்கள் பதில் கடமை புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
