Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

October 15, 2026

வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

October 15, 2026

பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நவம்பர் 15 க்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் -கொட்டகலை பிரதேச சபை தலைவர்  

October 15, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இலங்கை விமானப்படையின் 75 ஆவது ஆண்டு விழாவில் ஜனாதிபதி பங்கேற்பு
இலங்கை

இலங்கை விமானப்படையின் 75 ஆவது ஆண்டு விழாவில் ஜனாதிபதி பங்கேற்பு

ThanaBy ThanaMarch 7, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இலங்கை விமானப்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் வான் சாகசங்கள் மற்றும் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டார்.

இலங்கை விமானப்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் கண்காட்சி மற்றும் வான் சாகச நிகழ்வுகள் நேற்று (06) பிற்பகல் ரத்மலானை, இலங்கை விமானப்படை தளத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

விமானப்படைத் தளத்திற்கு வருகை தந்த முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, விமானப்படை மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.

பின்னர் கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்ட ஜனாதிபதி, வான் சாகசங்களையும் கண்டுகளித்தார்.

விமானப்படை அருங்காட்சியகத்தில் ஜனாதிபதி சிறப்பு நினைவுக் குறிப்பை இட்டதுடன், இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில், விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு நினைவுப் பரிசையும் வழங்கினார்.

இலங்கை விமானப்படையின் 75 ஆண்டுகால சிறப்புமிக்க சேவையை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இந்த கண்காட்சி மற்றும் வான் சாகச நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், கல்வி ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு வானூர்தி மற்றும் விமான தொழில்நுட்ப அரங்குகளையும் இது கொண்டுள்ளது.

இலங்கை விமானப்படையின் விமானங்களை மிக அருகில் சென்று பார்க்கவும் அவற்றின் தொழில்நுட்ப விவரங்களைப் பற்றி அறியவும் இது வாய்ப்பை வழங்குவதுடன், விமானப்படையின் அனைத்து தொழில்முறையிலான தனித்தனி அரங்குகள் மற்றும் வான்வழிப் பறப்பிற்காக ஏராளமான இலங்கை விமானப்படை விமானங்கள் மற்றும் சிவில் விமானங்கள் கண்காட்சியில் சேர்க்கப்பட்டுள்ளன.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026

    வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

    October 15, 2026

    நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

    October 15, 2026

    இலங்கையின் இராஜதந்திர வெற்றி: அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை ரத்து குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராட்டு!

    October 14, 2026
    Editors Picks

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026

    வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

    October 15, 2026

    பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நவம்பர் 15 க்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் -கொட்டகலை பிரதேச சபை தலைவர்  

    October 15, 2026

    நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

    October 15, 2026

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026

    வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

    October 15, 2026

    பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நவம்பர் 15 க்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் -கொட்டகலை பிரதேச சபை தலைவர்  

    October 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.