சாமிமலை: சாமிமலை 320 K மாநெலு பிரிவில் சமூர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் ஏற்பாட்டில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வொன்று மாநெலு கரப்பந்தாட்ட மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது, அப்பகுதிக்கு அரும்பணியாற்றி வரும் சமூர்த்தி உத்தியோகஸ்தர் ராஜமாணிக்கம் சூரியகலா அவர்கள் கௌரவிக்கப்பட்டார். அத்துடன் சமூர்த்தி முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் ஆகியோரும் இதன்போது விசேடமாக கௌரவிக்கப்பட்டனர்.
பெண்களின் முன்னேற்றம் மற்றும் சமூக ஒருமைப்பாட்டை வலியுறுத்தி இடம்பெற்ற இந்நாளில், கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின. குறிப்பாக, சிரேஷ்ட பாடகர் குமரேசன் மற்றும் கலைஞர்களான ஹெலன், ஜோன், ரேவதி, தனுஷிக்கா குமரேசன் ஆகியோரின் இனிமையான ‘கரோக்கி’ இசை நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்ததோடு, நிகழ்வுக்கு மேலும் மெருகூட்டியது.
இவ்விழாவில் பெருமளவிலான பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


