Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அக்கரப்பத்தனை -கிலைன்ளைன் பாடசாலையில் கல்வி முதுமாணிப் பட்டம் பெற்ற ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா

July 11, 2026

மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

July 10, 2026

தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

July 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இன்றைய தலைமுறைக்கான அரசியல் அமைப்பாக தொழிலாளர் தேசிய முன்னணி மறுசீரமைக்கப்பட்டு வருகிறது.
மலையகம்

இன்றைய தலைமுறைக்கான அரசியல் அமைப்பாக தொழிலாளர் தேசிய முன்னணி மறுசீரமைக்கப்பட்டு வருகிறது.

ThanaBy ThanaApril 5, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இன்றைய தலைமுறைக்கான அரசியல் அமைப்பாக தொழிலாளர் தேசிய முன்னணி மறுசீரமைக்கப்பட்டு வருகிறது-பிரதி பொதுச் செயலாளர் சுப்பையா கமலதாசன்.

இன்றைய தலைமுறைக்கான அரசியல் அமைப்பாக தொழிலாளர் தேசிய முன்னணி மறுசீரமைக்கப்பட்டு வருகிறது என பிரதி பொதுச் செயலாளர் சுப்பையா கமலதாசன் தெரிவித்துள்ளார். பதுளை மாவட்டத்திற்கான அமைப்பாளர்களுக்கு நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே தெரிவித்துள்ளார். அவர் மேலும் உறையாற்றும்போது,

நுவரெலியா மாவட்டத்திற்கு அடுத்ததாக மலையக மக்கள் அதிகமாக வாழும் மாவட்டம் பதுளை மாவட்டமாகும். அதனடிப்படையில் தொழிலாளர் தேசிய முன்னணி பதுளை மாவட்டத்தில் அரசியலுக்கு நுவரெலியா போன்றே பதுளைக்கும் சம வாய்ப்பு வழங்கியுள்ளது. கட்சி பதிவுக்கு முன்பதாகவே அரசியல் உயர்மட்ட குழுவில் பதுளை பிரதிநிதித்துவப்படுத்தி வாய்ப்பு வழங்கியது. அதன்பின்னர் ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் அதற்கான முக்கியத்துவத்தினை வழங்கியது. ஆனால் பதுளை மாவட்டத்திற்கான மக்கள் பிரதிநிதி உங்களில் இருந்து வர வேண்டுமே தவிர இறக்குமதி செய்யப்படகூடாது என்பதே தலைவரின் எதிர்ப்பார்ப்பாகும். அதற்கான முயற்சிகளையே கட்சியாகவும், கூட்டணியாகவும் முன்னெடுத்து வருகின்றோம்.

பதுளை மாவட்டத்தில் 18 உள்ளூராட்சி மன்றங்களில் 218 வட்டாரங்கள் காணப்படுகின்றன. அனைத்து வட்டாரங்களுக்குமான அரசியலை முன்னெடுப்பதற்கான அடிப்படை கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் அதனொரு கட்டமாகவே பதுளை மாவட்டத்திற்கான பிரதான அமைப்பாளர்களாக இருவரும், உள்ளூராட்சி மன்ற தொகுதிக்கான அமைப்பாளர்களாக 10 பேரும் நியமிக்கப்படுகின்றீர்கள். இதேபோன்று ஏனைய தொகுதிகளுக்கும் அமைப்பாளர் நியமனங்கள் இடம்பெறும்.

தேர்தலுக்காகவும், விளம்பரத்திற்காகவும் உங்களை அமைப்பாளர்களாக நியமனம் செய்துவிட்டு பின் அரசியல் அநாதையாக்கும் அமைப்பு தொழிலாளர் தேசிய முன்னணி இல்லை. இன்றைய தலைமுறைக்கான அரசியல் அமைப்பாக மறுசீரமைக்கப்பட்டு வருகின்றது. தொழிலாளர்களை மையப்படுத்திய தொழிற்சங்க பணிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதோடு தொழிலாளர்கள் அல்லாத வகுதியினருக்குமான அரசியல் கட்டமைப்புக்களை உருவாக்கி வருகின்றது. விரைவில் அதனை மக்கள்மயப்படுத்த உள்ளோம்.

பதுளை மாவட்டத்திற்கான தலைமையினை உங்களிலிருந்து உங்கள் ஒத்துழைப்போடு எதிர்காலத்தில் உருவாக்கவே கட்சி செயற்படுகிறது. எனவே அமைப்பாளர்களாக நியமனம் பெற்ற அனைவரும் தங்களுக்கான அரசியல் இருப்பை இந்த அமைப்பினூடாக உறுதி செய்துக்கொள்வதோடு, எமது பதுளை மாவட்ட அரசியல் செயற்பாடுகளில் பங்குதாரர்களாகவும் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அக்கரப்பத்தனை -கிலைன்ளைன் பாடசாலையில் கல்வி முதுமாணிப் பட்டம் பெற்ற ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா

    July 11, 2026

    மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

    July 10, 2026

    தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

    July 10, 2026

    “Ceylon Tea Village” (கொத்தணி தேயிலை கிராமங்கள்) 500 உருவாக்கும் வேலைத்திட்டம் 15 ஆம் திகதி ஆரம்பம்

    July 10, 2026
    Editors Picks

    அக்கரப்பத்தனை -கிலைன்ளைன் பாடசாலையில் கல்வி முதுமாணிப் பட்டம் பெற்ற ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா

    July 11, 2026

    மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

    July 10, 2026

    தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

    July 10, 2026

    அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

    July 10, 2026

    அக்கரப்பத்தனை -கிலைன்ளைன் பாடசாலையில் கல்வி முதுமாணிப் பட்டம் பெற்ற ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா

    July 11, 2026

    மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

    July 10, 2026

    தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

    July 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.