ராஜகிரிய பகுதியில் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 19 சீன பிரஜைகளின் கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக தடுத்து வைத்து, அவற்றை விடுவிப்பதற்காக பணம் பறிக்க முயன்ற குற்றச்சாட்டில் வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளால், வேயங்கொட பகுதியில் வைத்து சந்தேக நபரான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சீனப் பிரஜைகளின் பயண ஆவணங்களை மீண்டும் அவரிடம் ஒப்படைப்பதற்கு, தலா 300,000 ரூபாய் இலஞ்சம் கோரியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இப்பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, அந்தப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பெண் இடைத்தரகர் ஒருவர் ஊடாகத் தனது கப்பம் கோரும் கோரிக்கைகளை முன்னெடுத்து வந்தமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
