Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

August 22, 2026

இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

August 21, 2026

மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவு – மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுஷ்டிப்பு

August 21, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » டிக்கோயா இரட்டைக்கொலை சந்தேக நபர் கைது செய்யப்படவில்லை: காவல்துறை மறுப்பு!
Breaking

டிக்கோயா இரட்டைக்கொலை சந்தேக நபர் கைது செய்யப்படவில்லை: காவல்துறை மறுப்பு!

ThanaBy ThanaMay 28, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

டிக்கோயா இரட்டைக்கொலை சந்தேக நபர் கைது செய்யப்படவில்லை: காவல்துறை மறுப்பு!

​டிக்கோயா: ஹட்டன் – டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் மீண்டும் கைது செய்யப்பட்டுவிட்டதாக சமூக வலைத்தளங்களிலும், சில ஊடகங்களிலும் பகிரப்பட்டு வரும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என காவல்துறை ஊடகப் பிரிவு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

​குறித்த கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர், திடீர் சுகயீனம் காரணமாக கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிறைச்சாலை அதிகாரிகளின் பலத்த பாதுகாப்பில் இருந்தபோதிலும், அதிகாரிகளின் கவனத்தை திசைதிருப்பி சந்தேக நபர் அங்கிருந்து தப்பியோடியிருந்தார்.

​இந்த நிலையில், அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை காவல்துறை முற்றாக மறுத்துள்ளது. தப்பியோடிய சந்தேக நபரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும், அவரைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​கடந்த வெள்ளிக்கிழமை (மே 22) டிக்கோயா பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் வசித்துவந்த முதிய தம்பதியினர் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, அவர்களின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கின் பிரதான சந்தேக நபரே தப்பியோடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் மீறல்: அமைச்சர் சமந்த வித்யாரத்னவுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம்

    August 20, 2026

    அதிகாரம் கையில் இருந்தும் பழைய சுற்றறிக்கையை காரணம் காட்டுவது ஏமாற்று வேலை” – மனோ கணேசன் எம்.பி. சாடல்*

    August 20, 2026

    தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தக் கொடுப்பனவை 500 ரூபாவாக அதிகரிக்கக் கணபதி கனகராஜ் கோரிக்கை!

    August 20, 2026

    தலவாக்கலையில் தகுதியற்றவை என கண்டறியப்பட்ட 28 வாகனங்களின் அனுமதிப் பத்திரங்கள் தற்காலிக ரத்து!

    August 19, 2026
    Editors Picks

    மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

    August 22, 2026

    இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

    August 21, 2026

    மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவு – மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுஷ்டிப்பு

    August 21, 2026

    ​”விடுமுறைக் காலத்தில் பிள்ளைகளைச் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கவும்” – பெற்றோரையும் ஆசிரியர்களையும் கேட்டுக்கொண்டார் பிரதமர்!

    August 21, 2026

    மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

    August 22, 2026

    இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

    August 21, 2026

    மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவு – மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுஷ்டிப்பு

    August 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.