ஹொரணை பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றில் இடம்பெற்ற 35 மில்லியன் (மூன்றரை கோடி) ரூபாய் பணக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில், அந்த வங்கியின் உதவி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 3-ஆம் திகதி பிற்பகல், வங்கியிலிருந்து வேறு இரு கிளைகளுக்குப் பணத்தைக் கொண்டு செல்வதற்காகப் பைகளில் எடுத்துச் செல்லப்பட்டபோதே, பாதசாரியாக வந்த நபர் ஒருவர் அப்பணத்தை அபகரித்துக்கொண்டு தப்பிச் சென்றிருந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளைத் தொடர்ந்து, வங்கியின் உள்ளகத் தரப்பினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு முன்னெடுத்து வருகின்றது.
