Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தோட்ட அதிகாரி தாக்குதல்: உனுகலை தோட்டத்தில் வேலைநிறுத்தம் – போராட்டம் தீவிரம்

July 18, 2026

ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

July 18, 2026

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: அடுத்த வாரம் சபாநாயகரிடம் ஒப்படைப்பு!

July 18, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » உடப்புஸ்சல்லாவ டலோஸ் தோட்டத்தில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக முறையான தபால் சேவைகள் இல்லாததால் மக்கள் பெரும் அவதி
மலையகம்

உடப்புஸ்சல்லாவ டலோஸ் தோட்டத்தில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக முறையான தபால் சேவைகள் இல்லாததால் மக்கள் பெரும் அவதி

ThanaBy ThanaJune 11, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நுவரெலியா மாவட்டம் உடப்புஸ்சல்லாவ வலப்பனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட டலோஸ் தோட்டத்தில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக முறையான தபால் சேவைகள் இல்லாததால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகும் நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளனர்.

குறிப்பாக உடப்புஸ்சல்லாவ நகரில் உள்ள தபால் நிலையத்திலிருந்து டலோஸ்,எனிக் தோட்டங்களுக்கு கடிதங்கள் விநியோகிப்பதற்காக டலோஸ் மற்றும் எனிக் தோட்ட காரியாலயங்களுக்கு சென்று அனைத்து கடிதங்களும் வழங்கப்படுகின்றன..

 

இந்த கடிதங்கள் குறித்த தோட்டத்தில் காணப்படுகின்ற கொழுந்து நிறுக்கும் இடத்தில் பொதுவாக பெட்டிகளில் போடப்பட்டு காணப்படுகிறது.

 

இவ்வாறு அநேக கடிதங்கள் மற்றும் பதிவு தபால் மூலம் வருகை தரும் கடிதங்கள் என காணப்படுகிறது.

 

 

இவை அனைத்தும் பொதுமக்களுக்கு நேரே வீடுகளுக்கு சென்று வழங்கப்படுவதில்லை இதனால் மக்களுக்கு தபால் சேவை சிறப்பான தரமான செய்திகள் வழங்கப்படுவதில்லை.

 

 

இவ்வாறான சூழ்நிலையில் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாக்குவதோடு மக்களின் சிறப்பு உரிமைகள் கேள்விக்குறியானதாகவே காணப்படுகிறது.

 

குறிப்பாக பாடசாலை கடிதங்கள் வங்கியில் இருந்து வரக்கூடிய கடிதங்கள் பதிவு கடிதங்கள் அவசர கடிதங்கள் எதுவாக இருப்பினும் குறித்த பெட்டியில் போடப்படுவதால் இவை குறித்த காலத்திற்குப் பிறகு குப்பைகளுக்கு செல்கின்றன.

 

 

வாசிக்க தெரிந்த மக்கள் அவர்களுக்கு கடிதங்கள் வரும் பட்சத்தில் பார்த்து எடுத்துக் கொண்டால் மாத்திரமே கடிதங்கள் அவர்களின் கைகளுக்கு செல்லும். அதனை விடுத்து தூர இடங்களில் இருப்பவர்கள் இந்த கடிதங்களை பெற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 

இந்த விடயம் சம்பந்தமாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி கல்வி அமைச்சரிடம் வினவியபோது குறித்த தோட்டத்திலிருந்து மக்கள் கடிதம் ஒன்று அவருக்கு வழங்கும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கை எடுப்பதாக எம்மிடம் தெரிவித்திருந்தார்.

ஆனால் இத்தனை வருட காலங்களாக எவரும் கண்டு கொள்ளாத ஒரு விடயம் இனியாவது மக்களுக்கு விடிவு ஏற்படுமா என்ற எண்ணம் மக்களுக்கு தோன்றுகிறது. இந்த நவீன காலத்திலும் இவ்வாறான செயல்பாடுகள் அரச அதிகாரிகளையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனைக்குரிய விடயமாக கருதப்படுகிறது.

ஆகவே எதிர்காலத்தில் இதற்கான சிறந்த தீர்வு பெற்றுக் கொள்வதற்கு மக்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதை காணக் கூடியதாக இருக்கிறது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    தோட்ட அதிகாரி தாக்குதல்: உனுகலை தோட்டத்தில் வேலைநிறுத்தம் – போராட்டம் தீவிரம்

    July 18, 2026

    மலையக சமூகத்தின் வாழ்வியலைப் படம்பிடித்த ‘Uncover’ கண்காட்சி: பிரதி அமைச்சர் பிரதீப் பங்கேற்பு!

    July 18, 2026

    வெற்றிலைப்பாக்குடன் புகையிலை விற்பனை செய்தால் சிறை அல்லது அபராதம்! பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு

    July 18, 2026

    மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின் இயக்குநருடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!

    July 17, 2026
    Editors Picks

    தோட்ட அதிகாரி தாக்குதல்: உனுகலை தோட்டத்தில் வேலைநிறுத்தம் – போராட்டம் தீவிரம்

    July 18, 2026

    ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

    July 18, 2026

    நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: அடுத்த வாரம் சபாநாயகரிடம் ஒப்படைப்பு!

    July 18, 2026

    மலையக சமூகத்தின் வாழ்வியலைப் படம்பிடித்த ‘Uncover’ கண்காட்சி: பிரதி அமைச்சர் பிரதீப் பங்கேற்பு!

    July 18, 2026

    தோட்ட அதிகாரி தாக்குதல்: உனுகலை தோட்டத்தில் வேலைநிறுத்தம் – போராட்டம் தீவிரம்

    July 18, 2026

    ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

    July 18, 2026

    நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: அடுத்த வாரம் சபாநாயகரிடம் ஒப்படைப்பு!

    July 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.