துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து சேவைகள் மற்றும் அது தொடர்பான சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் கையொப்பமிட்டுள்ளார்.
இதனூடாக பயணிகள் அல்லது பொருட்களை வௌியேற்றுதல், கொள்கலன் பெட்டிகளை இறக்குதல், சேமித்து வைத்தல், விநியோகித்தல் மற்றும் உணவு மற்றும் பானப் பொருட்கள் அல்லது நிலக்கரி, எண்ணெய், எரிபொருள் போன்றவற்றை துறைமுகங்களில் உள்ள இயந்திரங்களின் ஊடாக வௌியேற்றுவதற்காக பொதுப் போக்குவரத்து சேவை இவ்வாறு அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
(235ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் படி, வரைவிலக்கணம் கூறப்பட்ட ஏதேனும் வீதி, பாலங்கள், மதகுகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் வான்வழி போக்குவரத்திற்காக தேவையான வசதிகளை வழங்குதல் மற்றும் பராமரித்தல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.