பல கோடி ரூபாய் செலவில் பூனாகலை – பண்டாரவளை பிரதான வீதியை புனரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எனினும், மறுபுறம் இந்த வீதியூடாகப் பயணிக்கும் பாதசாரிகள், பேருந்து பயணிகள், நோயாளர்கள், சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் என ஆயிரக்கணக்கானோர் தினமும் எழும் அதிகளவிலான மண் தூசியால் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
வீதிப் புனரமைப்புப் பணிகளின் போது தூசியைக் கட்டுப்படுத்துவதற்காக முறையாக நீர் தெளிக்கப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால், குறித்த அபிவிருத்தி வேலைத்திட்டம் முடிவடைவதற்கு முன்பே பலர் சுவாசம் மற்றும் ஒவ்வாமை தொடர்பான ஏனைய நோய்களுக்கு உள்ளாக நேரிடும் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் உடனடியாகத் தலையிட்டு, தூசியைக் கட்டுப்படுத்தத் தேவையான முறையான நடடிவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு பொதுமக்களும் பயணிகளும் கோரிக்கை விடுக்கின்றனர்.
