சொகுசு காருக்குள் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் சடலமொன்று கண்டெடுப்பு.
பாணந்துறை – பின்வத்த பகுதியில் சொகுசு வாகனமொன்றிற்குள் இருந்து சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் இன்று (28) காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலமாக கண்டெடுக்கப்பட்டவரின் உடலில் துப்பாக்கி சூட்டு காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
காரில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்