Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு!

October 6, 2026

தோட்டத் தொழிலாளர்களை ‘கள்ளத்தோணி’ எனக் கூறும் அதிகாரம் எவருக்கும் இல்லை! – இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனம்-

October 5, 2026

மலையகப் ரயில் சேவை பாதிப்பு: ‘டிட்வா’ புனரமைப்பின் பின் பயணித்த முதலாவது ரயிலே தடம் புரண்டது!

October 5, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » திரைப்பட சுற்றுலாத் துறைக்காக ‘ஒற்றைச் சாளர’ அனுமதி முறைமை
இலங்கை

திரைப்பட சுற்றுலாத் துறைக்காக ‘ஒற்றைச் சாளர’ அனுமதி முறைமை

ThanaBy ThanaJuly 1, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நாட்டின் திரைப்பட சுற்றுலாத் துறைக்காக ‘ஒற்றைச் சாளர’ (Single Window) அனுமதி முறையொன்றை நிறுவுவது தொடர்பாக, சம்பந்தப்பட்ட தரப்பினருடனான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கை சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தின் போது ஒற்றைச் சாளர அனுமதி முறையை நிறுவுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.

இலங்கையில் படப்பிடிப்பு மேற்கொள்ளப்படும் வெளிநாட்டுத் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், விளம்பரங்கள், பாடல்கள் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளின் தயாரிப்புகளுக்காக அனுமதி கோரும் விண்ணப்பதாரர்கள், பல அரச நிறுவனங்களிடம் இருந்து அனுமதி பெற வேண்டியுள்ளதாகவும், இதன் காரணமாக அனுமதி பெறும் செயல்முறை நீண்ட மற்றும் தாமதமான ஒன்றாக மாறியுள்ளதாகவும் இங்கு தெரியவந்தது.

எனவே, ஒற்றைச் சாளர அனுமதி முறையொன்றை நிறுவுவதற்குத் தேவையான முறையான வேலைத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

முன்மொழியப்பட்ட இந்த முறைமை குறித்து பொதுவான உடன்பாட்டுக்கு வருதல், அதனைச் செயல்படுத்துவதில் ஏற்படக்கூடிய சவால்களைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வுகாண்பதற்கான நடவடிக்கைகளைத் தீர்மானித்தல் மற்றும் அதனைச் செயல்படுத்துவதற்கான காலக்கெடு குறித்தும் இங்கு விரிவான கவனம் செலுத்தப்பட்டது.

இந்த ஒற்றைச் சாளர அனுமதி முறையை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதன் மூலம், உலகளவில் திரைப்படங்கள் மற்றும் ஏனைய படப்பிடிப்புகளுக்கு இலங்கை மிகவும் பொருத்தமானதொரு இடமாக மாறும் என்றும், திரைப்படத் துறையின் போட்டித்திறனை மேம்படுத்த முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் தம்மிகா கே. விஜயசிங்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் டி. அனோஜா கமகே, வன வளப் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் டபிள்யூ. டபிள்யூ. எம். பி. எஸ். சி. பாலமக்கும்புர, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் பணிப்பாளர் (அபிவிருத்தி) டபிள்யூ. எம். ஏ. எஸ். விக்ரமசிங்க, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சஞ்சய நிரோஷன, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் வி. பி. எதிரிசிங்க, தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் ருவன் பிரேமவீர உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகள், பாதுகாப்புப் பிரிவினரின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சுற்றுலா மற்றும் திரைப்படத் துறையுடன் தொடர்புடைய பலர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு!

    October 6, 2026

    பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் பொலிஸாரால் கைது!

    October 3, 2026

    ஹட்டன் இரட்டை கொலை வழக்கின் சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது

    October 2, 2026

    பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: இனி வார இறுதி நாட்களில் ‘மெட்ரோ பேருந்துகளை’ வாடகைக்கு எடுக்கலாம்!

    October 2, 2026
    Editors Picks

    முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு!

    October 6, 2026

    தோட்டத் தொழிலாளர்களை ‘கள்ளத்தோணி’ எனக் கூறும் அதிகாரம் எவருக்கும் இல்லை! – இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனம்-

    October 5, 2026

    மலையகப் ரயில் சேவை பாதிப்பு: ‘டிட்வா’ புனரமைப்பின் பின் பயணித்த முதலாவது ரயிலே தடம் புரண்டது!

    October 5, 2026

    பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் பொலிஸாரால் கைது!

    October 3, 2026

    முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு!

    October 6, 2026

    தோட்டத் தொழிலாளர்களை ‘கள்ளத்தோணி’ எனக் கூறும் அதிகாரம் எவருக்கும் இல்லை! – இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனம்-

    October 5, 2026

    மலையகப் ரயில் சேவை பாதிப்பு: ‘டிட்வா’ புனரமைப்பின் பின் பயணித்த முதலாவது ரயிலே தடம் புரண்டது!

    October 5, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.