Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

October 12, 2026

நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!

October 12, 2026

மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

October 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ நியமனம்
இலங்கை

புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ நியமனம்

ThanaBy ThanaJuly 1, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ நியமனம்

இலங்கை கடற்படையின் பதவி நிலை பிரதானியாகக் கடமையாற்றிய ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவுக்கு, வைஸ் அட்மிரல் பதவிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு, இலங்கை கடற்படையின் 27 ஆவது கடற்படைத் தளபதியாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்.

இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார்.

இந்த நியமனம் ஜூலை முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளதுடன், தற்போதைய கடற்படைத் தளபதி அட்மிரல் காஞ்சன பானகொட ஜூலை முதலாம் திகதி பதவியிலிருந்து ஓய்வுபெறுகிறார்.

வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் வித்தியாலயத்தில் கல்வி கற்ற டேமியன் பெர்னாண்டோ, 1991 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படையின் 21வது ஆட்சேர்ப்பின் கீழ் நிறைவேற்று பிரிவின் கெடெட் அதிகாரியாக இணைந்துகொண்டார். திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் தனது அடிப்படை கடற்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர், 1993 இல் சப்-லெப்டினன்டாக நியமிக்கப்பட்டார்.

35 வருட கால தனது சிறப்பான கடற்படை சேவையில், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு தொழில்முறை மற்றும் விசேட பயிற்சி நெறிகளை வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ பூர்த்தி செய்துள்ளார். அவர் ரணசூர, உத்தம சேவா ஆகிய பதக்கங்களைப் பெற்றுள்ளதுடன், அவரது தொழில்முறைத் திறன், செயல்திறன் மற்றும் அரிய சேவைப் பங்களிப்பைப் பாராட்டி, ஆறு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கை கடற்படைத் தளபதிகளினால் பாராட்டுப் பத்திரங்களும் (Letters of Commendation) வழங்கப்பட்டுள்ளன.

டேமியன் பெர்னாண்டோ, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான முதுமாணிப்(Master of Defence Studies) பட்டத்தையும், லண்டன் கிங்ஸ் கல்லூரியில் சர்வதேச பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளுக்கான முதுமாணிப் (Master of Arts in International Security and Strategy) பட்டத்தையும் பெற்றுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

    October 12, 2026

    நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!

    October 12, 2026

    மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    October 10, 2026

    PSTA சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய  கவனயீர்ப்பு போராட்டம்!

    October 10, 2026
    Editors Picks

    இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

    October 12, 2026

    நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!

    October 12, 2026

    மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    October 10, 2026

    அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

    October 10, 2026

    இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

    October 12, 2026

    நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!

    October 12, 2026

    மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    October 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.