கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் உள்ள ஐந்து கைதிகளுக்கு இடையே இன்று (10) பிற்பகல் திடீர் மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் காயமடைந்த இரண்டு கைதிகள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மோதல் ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறைச்சாலை அதிகாரிகளும் பொலிஸாரும் ஆரம்பித்துள்ளனர்.
